விவசாய கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஒருவரை தீயணைப்பு துறையினர் 12 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு மீட்டனர். சிங்கள புரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுந்தரராஜ்.

 

இவர் தனது உறவினர் வீட்டிற்கு சங்கராபுரத்தில் இருந்து பேருந்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்தில் ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த அவர் திடீரென பேருந்தை விட்டு இறங்கி விவசாயத் தோட்டம் வழியாக சென்று அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

 

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சுமார் பல மணி நேரமாகப் போராடி செல்வராஜை மீட்டனர். காயங்கள் ஏற்பட்ட நிலையில் உயிருடன் மீட்டனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.