கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வங்கி ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய வந்த நபரிடம் உதவி செய்வதுபோல் நடித்து 70 ஆயிரம் ரூபாயை நூதனமாக திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உன்னல்வாடியை சேர்ந்த தேவராஜ் என்பவர் பழைய பெங்களூரு சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அவருக்கு உதவி செய்வதாக கூறி ஏடிஎம் கார்டை பெற்றதுடன் அதன் ரகசிய எண்ணையும் அறிந்துள்ளார்.
பணத்தை டெபாசிட் செய்த பின்னர் தேவராஜ் ஏடிஎம் கார்டுக்கு பதில் வேறு ஒரு கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு அந்த மர்மநபர் சென்றுள்ளார்.
அவர் சென்ற சில மணி நேரங்களில் தேவராஜன் கணக்கிலிருந்து முதலில் 20,000 ரூபாயும் பின்னர் ஐம்பதாயிரம் ரூபாயும் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ் வங்கிக்கு தகவல் அளித்து ஏடிஎம் கார்டை உடனே பிளாக் செய்ததால் வங்கிக் கணக்கிலிருந்து 90,000 பணம் தப்பியது.