பள்ளி மாணவியின் கையை அரிவாளால் வெட்டிய நபர்..!

துரை திருமங்கலம் அருகே பள்ளி மாணவியின் கையை அரிவாளால் வெட்டியதுடன் பள்ளிக்கு செல்லும்போது தொடர்ந்து அச்சுறுத்தி வரும் எதிர்வீட்டு நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

 

காண்டை கிராமத்தை சேர்ந்த முனியாண்டி, முருகேஸ்வரி தம்பதியினருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் செல்வம் என்பவர் இடையே பகை இருந்துள்ளது. இந்த நிலையில் தம்பதியினர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் இருந்த மகளை தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களது இளைய மகளின் கையை அரிவாளால் வெட்டியுள்ளார்.

 

இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட செல்வம் ஜாமினில் வெளிவந்து அந்தப் பெண்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்து இருக்கிறார்கள்.