எருமையை தூக்கி தோளில் சுமந்த நபர்..!

க்ரைனை சேர்ந்த நபர் தனது வலிமையை நிரூபிக்கும் வகையில் எருமையை அடக்கி அதனை தோளில் சுமந்த வீடியோ வைரலாகி வருகிறது. 41 வயதான டிமிட்ரோவ்வின் அசாதாரண வலிமையை கண்ட நெட்டிசன்கள் இவரை பீம் பாய் என அழைக்கின்றனர்.

 

முன்னதாக இவர் ஒரே நேரத்தில் ஆறு மனிதர்களை தூக்குவது, குதிரை, ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகளை தோளில் சுமப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார்.