100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக மாரத்தான்..!

ரூரில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது. கரூரிர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது.

 

தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம் என்று உறுதி மொழியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

இந்த மினி மாரத்தானில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மினி மாரத்தான் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன.