சிலிண்டருக்கு தீ வைத்து மாற்றுத்திறனாளி மனைவியை கணவன் எரிக்க முயற்சித்த சம்பவம்..!

கோவை சூலூர் அருகே மதுபோதையில் கேஸ் சிலிண்டருக்கு தீ வைத்து மாற்றுத்திறனாளி மனைவியை கணவன் எரிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புத்தூரில் மனைவி அமுதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த தாமோதரன் மதுபோதையில் அமுதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான் என்றும் மீண்டும் தகராறில் ஈடுபட்ட போது போலீசில் புகார் அளிக்கப் போவதாக கூறியதால் ஆத்திரமடைந்த தாமோதரன் சிலிண்டருக்கு தீ வைத்துவிட்டு அவன் வெளியேற விடாமல் தடுத்துள்ளார்.

 

இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்ட நிலையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு தரைமட்டம் ஆனது. இதையடுத்து போலீசார் தாமோதரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.