ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்..!

ரு தினங்களுக்கு முன் மாயமான 19 வயது இளம் பெண் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது 19 வயது மகள் கண்ணகி முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

 

இவர் கடந்த 18-ம் தேதியிலிருந்து காணவில்லை என்று மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை நல்லூரில் உள்ள ஏரியில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடலை மீர்ர போலீசார் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை விசாரணையை தொடங்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.