நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று நிறைவடைகிறது..!

ருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று நிறைவடைகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

 

அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட்தேர்வு கொரொனா பரவல் காரணமாக செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை ஜூலை 13ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை அவகாசம் கோரப்பட்டுள்ளது.

 

எனவே கொரொனா பரவலின் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தேர்வு நடக்கும் நீட் தேர்வு நடக்கும் நகரங்களில் எண்ணிக்கை 155 இலிருந்து 198 ஆக அதிகரித்துள்ளது.