விழுப்புரத்தில் உணவு, தண்ணீரின்றி உயிரிழந்த சிறுவன்..!

விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உணவு, தண்ணீரின்றி அவர் உயிரிழந்திருப்பது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

 

கடந்த 15ஆம் தேதி சிவகுரு என்பவரது தள்ளுவண்டியில் 5 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுவரை குழந்தை யாருடையது என்று தகவல் கண்டறியப்படவில்லை.

 

சிறுவனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவர் உணவு தண்ணீரின்றி இருப்பது தெரியவந்துள்ளது. சிறுவனின் புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.