சமோசாவில் பல்லி இருப்பதை அறியாமல் சாப்பிட்டு சிறுவனுக்கு வாந்தி, மயக்கம்..!

ராமநாதபுரத்தில் சமோசாவில் பல்லி இருப்பதை அறியாமல் சாப்பிட்டு சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழக்கரையை சேர்ந்த கார்மேகம் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரியில் இருந்து தன் மகன் வாசுதேவனுக்கு சமோசாவை வாங்கி வந்துள்ளார்.

 

சமோசாவை சாப்பிட்ட சிறுவனுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அப்போது சிறுவன் சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதேபோல் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.