வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை கணவன் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உட்கோட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நத்தக்கடையூர் பகுதியில் 19.06.2013 அன்று மாலை 5.30 மணியளவில் யமுனாதேவி (34) என்பவர் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இறந்த யமுனாதேவியின் தந்தை அர்ஜுனன் (68) கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர் விசாரணை செய்ததில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கை காங்கேயம் துணைக்காவல் கண்காணிப்பாளர் சுருளிராஜா கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தினார்.

மேலும், கணவன் சரவண ராஜ்குமார் (36), சாந்தி (56), ஆறுமுகம் (66), அசோக் (34) ஆகிய நால்வரின் மீது வழக்குப்பதிவு செய்து,, எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தார். இவ்வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

 

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆலோசனையின்படி காங்கேயம் துணைக்காவல் கண்காணிப்பாளர் செல்வம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிக்கு எதிராக நீதிமன்றத்தில் பதிவு செய்து இன்று 19.07.2019 ஆம் தேதி திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முதல் எதிரி சரவணராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், 2-4 எதிரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.