பெண் கொடுக்காததால் மாமா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மருமகன்..!

பெண் கொடுக்காத ஆத்திரத்தில் மாமா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மருமகனை போலீஸார் கைது செய்தனர். மதுரையை அடுத்த மீனா புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

 

இதனிடையே இவரின் சகோதரி மீனா மேளக்கால் பகுதியில் வசித்து வருகிறார். இவரின் மகன் தீபன் தன் மாமாவிடம் அப்பெண்ணை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு பாலமுருகன் மறுத்ததாக தெரிகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த தீபன், பாலமுருகன் வீட்டின் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசி விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.