தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மொட்டையடித்த மகளிர் காங்கிரஸ் தலைவி..!

கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்காததால் அதிருப்தியடைந்த மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஒருவர் தனது தலைக்கு மொட்டையடித்து நூதன முறையில் எதிர்ப்பினை தெரிவித்தார். கேரள மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக பணியாற்றிவந்த லத்திகா 8 தொகுதியில் போட்டியிட விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

 

ஆனால் டிக்கட் வழங்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சி அலுவலக வளாகத்தில் தலைக்கு மொட்டை அடித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.