பணிக்கு தாமதமாக வந்ததை கண்டித்த எஸ்.ஐ.யை கண்டித்ததால் பாலியல் புகார்..!

ணிக்கு தாமதமாக வந்ததை கண்டித்ததால் சென்னையை சேர்ந்த உதவி ஆய்வாளர் மீது பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்த சம்பவம் விசாரணையில் வெளிவந்திருக்கிறது.

 

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண் காவலர் ஒருவர் அங்குள்ள உதவி ஆய்வாளர் மீது புகார் அளித்ததாக கூறப்பட்டது. உதவி ஆய்வாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார்.

 

இதனால் நடந்த விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பணிக்கு தாமதமாக வந்த பெண் காவல்துறை உதவி ஆய்வாளரை கண்டித்ததால் இதுபோல் பாலியல் புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதிலேயே இருதரப்பும் அளித்த புகார் குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.