தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த சீமான்.!

செங்கல்பட்டில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் சீமானை வரவேற்க பெரிய விளக்குகளை எரியவிட்டு காத்திருந்த தொண்டர்களை சந்திக்க சீமான் வருவதற்கு காலதாமதமானது. இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்பதால் காவல்துறையினர் மின்சாரத்தை தூண்டித்ததால் அங்கு காத்திருந்தவர்கள் இருளில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 

இதனால் போலீசாரிடம் சில நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் போலீசார் தேர்தல் விதிமுறைப்படி நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த சீமானுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்தனர்.

 

ஆனால் அவர் போலீசாரின் அறிவுறுத்தலை மீறி திறந்த வேனில் நின்றபடி தனது வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு சென்றுள்ளார். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இந்த தேர்தலில் முதன்முதலாக போலீசாரிடம் தேர்தல் வழக்கு வாங்கியுள்ள அரசியல் கட்சித் தலைவர் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் வருகைக்காக காத்திருந்த பெண்கள் கூட்டத்தின் பாதுகாப்பு கருதியாவது மின்சார இணைப்பு துண்டிப்பு காவல்துறையினர் தவிர்த்து இருக்கலாம் என்கின்றனர் அங்கிருந்தவர்கள்.