எழுத்தாளர் இமயத்துக்கு 2020 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது..!

ழுத்தாளர் இமயத்துக்கு 2020 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இமயம் என்ற புனைபெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் அண்ணாமலை. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து படைப்புலகில் இயங்கி வருபவர்.

 

ஆறுமுகம், செடல், என்கதை, செல்லாத பணம் உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். சிறுகதைத் தொகுப்புகளையும் இமயம் எழுதியுள்ளார். இவரது செல்லாத பணம் நாவலுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

அக்னி விருது ,பெரியார் விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவர்களுக்கு சாகித்ய அகடமி விருது மூலம் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.