உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டால் ரூ. 10,000 அபராதம்..!

புதுச்சேரியில் உரிமம் (License) பெறாமல் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ”புதுச்சேரியில் பல பகுதிகளில் பொதுமக்கள் சிலர், உரிமம் எதுவும் பெறாமல் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் தனியார் சேவை வாகனங்களை வாடகைக்கு விடுவதாகப் போக்குவரத்துத் துறைக்குப் புகார்கள் வந்துள்ளன.

 

குறிப்பாக, புதுவைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மையமாக வைத்து நடத்தப்படும் இத்தகைய நடவடிக்கைகள், மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்கு முரணானவை ஆகும். வாடகை வாகன அமைப்பைப் பற்றி அறியாத நபர்களும், ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லாதவர்களும் இந்த வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகை (Insurance) மற்றும் அரசின் இலவச மருத்துவ சேவை ஆகியவற்றைப் பெற முடியாமல் போகும். இது விபத்தில் சிக்கும் ஓட்டுநருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும்.

 

எனவே, இருசக்கர வாகனங்களை உரிய உரிமம் இல்லாமல் வாடகைக்கு விடுவது மோட்டார் வாகனச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவோர் கண்டிப்பாகப் போக்குவரத்துத் துறையில் உரிமம் பெற வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 5 இருசக்கர வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். உரிமம் பெறாமல் விதிகளை மீறுவோர் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும்” என்றும் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரித்துள்ளார்.


அரசு, தனியார் பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம்..!

ரோடு பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

 

இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் 6 தனியார் பேருந்துகளுக்கு ஆர் ஹாரன் தொடர்பாக தலா பத்தாயிரம் அபராதம் விதிக்க அபராதம் விதித்த அவர்கள் பேருந்துகளில் ஹாரன் மற்றும் முதலுதவி பெட்டி சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

 


பாலத்தில் நின்ற ரயிலை உயிரை பணயம் வைத்து சரி செய்த ஊழியர்களுக்கு ரூ.10,000 வெகுமதி..!

த்திரபிரதேசத்தில் இருப்பு பாதையில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்பொழுது பாலத்தின் பக்கவாட்டில் இருந்தும், ரயிலுக்கு அடியில் படுத்தவாரும் ரயில்வே ஊழியர்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

துரிதமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வெகுமதியாக வழங்கப்பட்டது.

 


ஹோட்டலில் மெதுவாக சாப்பிட்டால் ரூ.10,000 அபராதம்..!

ணவகத்தில் அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்ட நபருக்கு உணவகம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் சாலையில் உள்ள மெக்டொனல்ஸ் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஒரு நபர் தனது சகோதரரை சந்தித்து உணவருந்தியுள்ளார்.

 

அவர்கள் சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்க வந்த பொழுது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மெக்டொனல்ஸ் சாப்பிட 90 நிமிடங்கள் தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி அவர் அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்டதால் பத்தாயிரம் ரூபாய் அபராதமாக விரிக்கப்பட்டது.

 

இது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இதுவரை எந்த உணவகத்திலும் 90 நிமிடங்கள் மட்டுமே சாப்பிட அனுமதி என எந்த அறிவிப்பு பலகை இல்லை எனவும் உணவை அவசரமாக சாப்பிட தாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 


தகைசால் விருது பெறுபவர்களுக்கு ரூ 10,00,000 காசோலை..!

மிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழன் என்ற புதிய மருந்தை உருவாக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களுக்கு வழங்குவதற்காக தகைசால் தமிழர் என்ற புதிய முறையை உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழக முதல்வர் தலைமையில் தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தலைமைச் செயலாளர் உள்ளடக்கிய குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு தகைசால் தமிழர் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் பாராட்டுச் சான்றிதழையும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.