பிரியங்கா காந்தி குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக்..!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஹேக் செய்யப்பட்ட விவகாரம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

உத்தரப்பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி தனது குழந்தைகளின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை தெரிவித்தார்.

 

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.