சபரிமலைக்கு சென்ற குடியரசு தலைவர் ஹெலிகாப்டரின் டயர் கான்கீரீட்டில் புதைந்ததால் பரபரப்பு..!

பரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பயணம் செய்த ஹெலிகாப்டரின் டயர் கான்கீரிட்டில் புதைந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மாலை கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

 

தொடர்ந்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற திரெளபதி முர்மு இரவில் அங்கு ஓய்வெடுத்தார். அதன்பின்னர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். மோசமான வானிலை காரணமாக நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர் பிரமாடம் என்ற இடத்தில் தற்காலிகமாக தயார் செய்த ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறக்கம் செய்யப்பட்டது.

 

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஹெலிகாப்டரில் இருந்து வெளியே வந்த பிறகு ஹெலிகாப்டரின் டயர் கான்கீரிட்டில் புதைந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.இன்று காலையில் அவசர அவசரமாக கான்கிரீட் ல் தயார் செய்த ஹெலிகாப்டர் தளம் கான்கிரீட் சரியான முறையில் செட் ஆகாத நிலையில் ஹெலிகாப்டரின் டயர் காங்ரீட்டில் புதைந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் ஹெலிகாபரை தள்ளி நீக்கி மீட்டனர்.