பூசாரியின் மேல் 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம்..!

ர்மபுரி மாவட்டம் நடப்பனகள்ளி கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் அருள் வாக்கு வந்து ஆடிய பூசாரியின் மேல் 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

 

இந்தூர் அடுத்த நடப்பனகள்ளி கிராமத்தில் பெரிய கருப்பசாமி கோவிலில் இன்று ஆடி அமாவாசையை ஒட்டி கருப்பு சாமிக்கு அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் கருப்பு சாமிக்கு மது பானங்களையும், சுருட்டு களையும் வைத்து வழிபட்டனர்.

 

இதனையடுத்து அருள் வந்து ஆடிய கோவில் பூசாரியான கோவிந்தன் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அப்போது அவர் மீது மற்ற பூசாரிகள் 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து காய்ந்த மிளகாயை மொத்தமாக எரித்து மிளகாய் யாகம் நடைபெற்றது.