ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கொரொனா நிவாரணமாக ஒரு லட்சம் வழங்க திட்டம்..!

கொரோனா நிவாரண நிதிக்கான 1.9 டிரில்லியன் டாலர் மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். வெள்ளிக் கிழமை பிற்பகலுக்குள் கோவிட் நிவாரண மசோதாவில் அதிபர் கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே அதிபர் ஜோ பைடன் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

 

கோவிட்காலத்தால் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல்வேறு தொழில்கள் முடங்கின. வேலை வாய்ப்புகள் பறிபோகின.

 

மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்க ஜோ பைடன் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா நீண்ட இழுபறிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.