தென்காசியில் அமைந்துள்ள குற்றாலத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தை பொருத்தவரை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும்.
ஆனால் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மே மாதம் முதல் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களை நம்பியிருக்கும் வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.