தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகள் என கூறி கேபிள்களை திருடிய இருவரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் !!!

கோவையை அடுத்துள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.அங்கு தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.இந்த டவரை சுற்றிலும் இருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்துள்ளனர்.சந்தேகமடைந்த கோவிந்தராஜ் அவர்களை பிடித்து விசாரிக்கையில் இருவரும் தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகள் என்றும்,டவரில் பழுது ஏற்பட்டுள்ளது.பழுதினை சரி பார்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவ்வாறு எதுவும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.பின்னர்,அவர்களிடம் பேசியதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.உடனே,சுதாகரித்துக்கொண்ட கோவிந்தராஜ் உட்பட பலர் தர்ம அடி கொடுத்து செட்டிப்பாளையம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறை விசாரணையில் அவர்கள் கிணத்துக்கடவு செட்டிக்காபாளையம் மணிகண்டன் என்பதும்,செட்டிப்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த ஜோதிராஜ் என்பதும் தெரிய வந்தது. மேலும், டிரான்ஸ்மிசன் பூஸ்டர் உட்பட பல பொருட்களை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து,70 ஆயிரம் மதிப்புள்ள போலீசார் டிரான்ஸ்மிசன் பூஸ்டர் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகள் என கூறி கேபிள்களை திருடிய இருவரை பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.