நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் இருந்த கூட்டத்தால் அபராதம் விதிப்பு..!

கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சினிமா படப்பிடிப்பை பார்க்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்ததால் படப்பிடிப்பு குழுவிற்கு 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருவாய்த்துறையினர் உத்தரவிட்டனர்.

 

கோவை மாவட்டத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அதன் அருகே உள்ள ஆனைமலை ஆற்றங்கரை பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது. அதை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டத்திற்கு காரணமாக இருந்த படக்குழுவிற்கு 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.