பள்ளி வாகனம் மீது அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி விபத்து..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அதிவேகமாக வந்த ஆம்னி கார் ஒன்றும் பள்ளி வாகனம் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்செங்கோடு ராசிபுரம் சாலையில் சக்கரம்பலயம் பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் மீது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானது.

 

திடீரென பிரேக் கிடைத்ததால் ஆம்னி கார் சினிமா படங்களில் சண்டைக் காட்சிகளில் வருவதுபோல் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை.