இனி பொறியியல் படிப்பதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் தேவையில்லை..!

டப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பி‌இ மற்றும் பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க இனி கணிதமும், இயற்பியலும் கட்டாயமில்லை என்று அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆன ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

 

தற்போது உள்ள நடைமுறைப்படி இவை கட்டாயமாக உள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இயற்பியல், கணக்கு, கணினி அறிவியல், வேதியியல், தகவல் தொழில்நுட்பம் ,உயிரியல் போன்ற துறைகளில் ஏதேனும் மூன்று துறைகளில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

 

வணிகவியல் மற்றும் வேளாண்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கணிதம் தான் அனைத்து பொறியியல் பட்டப் படிப்புக்கும் அடித்தளம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை நடப்பு கல்வி ஆண்டில் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.