நாடு முழுவதும் நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும்..!

நாடு முழுவதும் நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்சி நர்சி,ங் பிஎஸ்சி லைஃப் சயின்ஸ் படிப்புகளில் இனி நீட் தேர்வு கட்டாயம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. பல் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

 

இந்த தேர்வை கடந்த ஆண்டு சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 1-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தீர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

 

பொதுவாக மே மாதம் நடைபெறும் இந்த தேர்வானது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெற தொடங்கியதும் தேர்வுக்கான பாடத்திட்டம் ,வயது உள்ளிட்ட தகுதி திட்டங்கள், இட ஒதுக்கீடு, தேர்வுக்கட்டணம், தேர்வு நடைபெறும் நகரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் கூடிய விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லைப் சயின்ஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று பேசிய திருமுகமே அறிவித்துள்ளது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு இன்று நீட் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது செவிலியர் படிப்பு களுக்கு நீட் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.