கள்ளக்காதலை கண்டித்த கணவனை கூலிப்படை வைத்து ஏவி மனைவி கொலை செய்த வழக்கில் சிவகங்கை சேர்ந்த கூலிப்படை தலைவன் சமயதுரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கொடுங்குளத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் பட்டுக்கோட்டை அருகே ஆண்டிகாடு கிராமத்தில் வசித்து வந்த இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்பு கொடி குளத்தில் வாழ்ந்து வந்தனர்.
அப்போது ஆர்த்திக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளையராஜா விற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது இதை அறிந்த ஸ்ரீகாந்த் மனைவியை கண்டித்தார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய ஆர்த்தி திட்டமிட்டார்.
இளையராஜா உதவியுடன் கூலிப்படையினரை ஏவி 2021 நவம்பரில் ஸ்ரீகாந்த் அறிவாளால் வெட்டி கொலை செய்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிறுவாச்சி காட்டுப்பகுதியில் புதைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து இரு மாதங்களுக்கு முன்பு திருவாடானை டிஎஸ்பி நிரேஷ்பழனிவேலுக்கு தகவல் கிடைத்தது. உடன் ஆர்த்தி இளையராஜா மற்றும் கொலைக்கு தொடர்புடைய அஜித்குமாரை போலீசார் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர் . கொலை சம்மந்தமாக கூலிப்படையைச் சேர்ந்த சமயத்துரை ஆசைமுத்துவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த நெய் வியாபாரி வேல்முருகன் என்பவரை சில நாட்களுக்கு முன்பு கூலிப்படையினர் கொலை செய்தனர். இந்த வழக்கில் திருப்பாச்சேத்தி போலீசார் சமயத்துரையை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சூழலில் ஸ்ரீகாந்த் கொலையில் இவர் ஈடுபட்டதால் திருவாடானை சார்பு ஆய்வாளர் கோவிந்தன் சென்று சமயதுரையை மீண்டும் கைது செய்தார். அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். பல்வேறு கொலைகளை செய்து கூலிப்படைக்கு தலைவனாக விளங்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆசைமுத்துவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்