13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபர் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பாஸ்கர் என்பவர் தனது வீட்டிற்கு எதிரில் வசித்து வரும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

 

இதுகுறித்து தெரிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஸ்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.