லாஸ்லியாவிற்கு தர்ஷன் மீது காதலா? அல்லது ஷெரின் மீது வெறுப்பா?

ஷெரின் தர்ஷனுக்காக சுட்ட ஹார்ட்டின் சாப்பாத்தியை லொஸ்லியா குத்துவதையும் மறுபடியும் சுட்டால் அதையும் குத்துவேன் என கூறுவதையும் பார்த்திருப்பீர்கள்.

 

இந்நிலையில் லொஸ்லியா ஏன் அவ்வாறு செய்தேன் என்பதற்கான காரணத்தை சேரனிடம் கூறுகையில், எனக்கு அது பிடிக்கவில்லை. நான் தர்ஷனை சாப்பிடுவதற்கு அழைத்து கொண்டிருந்தேன். நான் சாப்பிட்ட பின் பேச வேண்டும் என்று அழைத்து கொண்டிருந்தேன்.

ஆனால் இவன் வரவில்லை. அதுவே கோபம் என்றார். அதற்கு நீ தர்ஷனை தானே குத்த வேண்டும் என சேரன் கேட்க, எனக்கு ஷெரீன் சுட்ட சப்பாத்தி பிடிக்கவில்லை, அதற்கு காரணம் கிடையாது. அடுத்தும் சுட்டாள், மீண்டும் குத்துவேன் என்று கூறினார்.