தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும்: சட்டக்கல்லூரி மாணவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை!

சட்டக்கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ச.சுபாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;-தமிழகத்தில் 144 தடை ஊரடங்கு உத்தரவு அறிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் மதுபானக் கடைகள் தற்போது மூடியுள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் முழுமையாக தளர்த்தப்பட்ட பின்னரும் அரசு நடத்தும் மனபானக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.

அதுமட்டுமல்லாது தற்போது மதுபானக் கடைகள் மூடியுள்ள நிலையில் தமிழகத்தில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சாலை விபத்து அதிகரிக்க காரணம் மதுபானக் கடைகளும் காரணம் என்பதை அரசு அறிய வேண்டும். அது மட்டுமல்லாமல் மதுவால் பள்ளி கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என பெரிதும் சீரழித்து வருகின்றனர் .

 

எனவே அரசு மதுபானக்கடைகளை நிரந்தரமாக மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ச.சுபாஷ் தெரிவித்துள்ளார்.