கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் – ஸ்டாலின் அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசியலில் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நீண்ட நெடிய மூத்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர்.

 

மறைந்த கருணாநிதி அவர்கள் வயது முதுமையால் சிகிச்சையில் இருந்த கருணாநிதி 2018-ஆம் ஆண்டில் காலமானார். இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது முதலமைச்சராக உள்ளார்.

 

நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிலையில் இன்று கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.