டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இன்று மாலை நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 10 நாடுகளை சேர்ந்த 12 வீரர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்திய வீரர் முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து முதல் இடத்தை பிடித்தார். இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து நீரஜ் சோப்ரா புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற காட்சியை அவரது சொந்த ஊரில் உறவினர்களும் ஊர் மக்களும் கண்டு ஆரவாரம் செய்தனர்.