நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் இலவசங்களே தேவை இல்லை..!

நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் இலவசங்களே தேவை இல்லை என்ற நிலையை உருவாக்க போவதாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குறுதி அளித்துள்ளார்.

 

சட்டப்பேரவை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் தனது தொகுதியில் முதல் நாள் பரப்புரையில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தேரடி, பர்மா காலனி இந்தப் பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்துள்ளார்.

 

அப்போது நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் மக்களின் திறனை உயர்த்த போவதாகவும் அரசு பள்ளியில் பயிலும் அனைவருக்கும் அரசு வேலை என்ற நிலையை உருவாக்க போவதாக சீமான் உறுதியளித்துள்ளார். இலவசங்களையும் கவர்ச்சி திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்ற தயாராக இல்லை என்றும் சீமான் கூறியுள்ளார்.