பெண் குழந்தை பிறந்ததால் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன்..!

சேலத்தில் பெண் குழந்தை குடும்பத்திற்கு ஆகாது எனக் கூறி தன்னையும் குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளித்துள்ளார்.

 

சேலம் பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், கௌசல்யா ஆகியோருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு கௌசல்யா கர்ப்பம் தரித்துள்ளார்.

 

நான்காவது மாதம் நிறைவடைந்த நிலையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு நல்லது அல்ல என கூறி வெங்கடேசனும் அவரது குடும்பத்தாரும் கவுசல்யாவை கொடுமைப்படுத்தி வயிற்றில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

அதையும் தாண்டி அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த நேரம் சரியில்லை எனக் கூறி இருவரையும் வெங்கடேசன் வீட்டை விட்டு வெளியேற்றியதாக செல்லப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.