சைலன்சரை கழற்றிவிட்டு அதிக சத்தத்துடன் பைக்கை ஓட்டிச் சென்றதால் தட்டி கேட்டவர்களை தாக்கிய புள்ளிங்கோ..!

திருப்பதி அருகே சைலன்சரை கழற்றிவிட்டு அதிக சத்தத்துடன் பைக்கை ஓட்டிச் சென்ற புள்ளிகோங்களை பொதுமக்கள் தட்டி கேட்டதால் அவர்களை கற்களை வீசி தாக்கியதுடன் வீடு, கடைகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவியது.

 

தெலுங்கானா அடுத்த பைசா நகர் சுல்பிகர் காலனியில் தடம்மாறி திரியும் சில இளைஞர்கள் சைலன்சரை கழற்றிவிட்டு காதை கிழிக்கும் சசப்தத்துடன் பைக்கை ஓட்டி சென்றுள்ளனர்.

 

இதை தட்டி கேட்ட அந்த பகுதி மக்களை இளைஞர்கள் தாக்கியதுடன் அங்கே நிறுத்தி வைத்திருந்த 2 ஆட்டோக்கள், ஒரு கார், 2 பைக் மற்றும் வீடு, கடைகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவியது.

 

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் செய்தியாளர்கள் மீதும் கல்வீசி இளைஞர்கள் தாக்கியதில் இரண்டு கான்ஸ்டபிள்கள், 3 செய்தியாளர்கள், நான்கு இளைஞர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.