அரசு பொது போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசியல் கட்சியினருக்கு எந்தவித உதவியும் செய்யக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தேர்தல் பணியில் இருக்கக்கூடிய போக்குவரத்து ஊழியர்கள் அனைவருமே தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். எனவே தேர்தல் விதிகளை அவர்கள் கடைபிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவின் போது வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த விதமான உதவிகளையும் அவர்கள் செய்யக்கூடாது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளை கடைப்பிடிக்காத போக்குவரத்து ஊழியர்கள் மீது தேர்தல் விதி என் 134 இன் படி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.