ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி பணம் பறித்த சக மாணவர்..!

ஸ்லாத்தில் மருத்துவம் படிக்கும் சென்னை மாணவியின் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி பணம் பறித்த சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.

 

வழக்கறிஞரின் மகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்த நிலையில் அங்கு ஆந்திராவைச் சேர்ந்த பல்லவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியிடம் அடிக்கடி பணம் பெற்று வந்ததாகவும் ஒரு கட்டத்தில் மாணவி பணத்தை திருப்பி கேட்ட போது இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதில் மாணவியுடன் தனிமையில் இருந்த புகைப்படத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுவதாக பல்லவா மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

 

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லவா சொந்த ஊர் திரும்பிய நிலையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.