வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 103வது நாளாக தொடர்கிறது..!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 103வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லி எல்லைகளில் திரளான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.

 

டெல்லியில் டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதற்கும் அஞ்சாத விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

விவசாயிகள் போராட்டம் நேற்று 3வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.