மகா கும்பமேளாவின் போது போலியான கோவிட் சான்றிதழ்..!

கா கும்பமேளாவின் போது போலியான கோவிட் பரிசோதனை மையங்கள் மூலமாக சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இதனடிப்படையில் அமலாக்கத் துறையினர் மருத்துவ பரிசோதனை கூடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். டெகராடூன், டெல்லி, நொய்டா, ஹரித்வார் ,உள்ளிட்ட இடங்களில் உள்ள பரிசோதனைக் கூடங்கள் மற்றும் அதன் இயக்குனர்களின் வீடுகள் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 30 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.