தண்டவாளத்தில் நிறுத்தியிருந்த ரயில் தானாக இயங்கியதால் பரபரப்பு..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் தானாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆறாம் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மாலை நான்கே முக்கால் மணியளவில் திடீரென தண்டவாளத்தில் ஓடியது.

 

இதைக்கண்ட ரயில்வே பணியாளர்கள் ஓடிச்சென்று கற்களை தண்டவாளத்தின் மீது நிறுத்த வைத்துள்ளனர். ஆனாலும் நிற்காத ரயில் செங்கல்பட்டு செல்லும் ரயில் தண்டவாளத்தின் மேல் இருந்த காம்பை உடைத்து சென்றது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், நின்று கொண்டிருந்த ரயில் தானாக இயங்கியது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.