கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு அசத்திய மாணவ மாணவிகள்.கோவையில் மாவட்ட சைக்கிள் அசோசியேசன் சார்பில் கோவைப்புதூர் மைதானத்தில் cross country எனும் தலைப்பில் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
மாவட்ட அளவில் மைதானத்தில் ட்ராக்குகள் அமைத்து முதன் முறையாக நடைபெற்ற இதில் ஆறு வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக போட்டிகளை கோவை மாவட்ட சைக்கிள் அசோசியேசன் தலைவர் மாணிக்கம் மற்றும் நல்லறம் அறக்கட்டளை விவேக் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போட்டிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், 14 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டிக்கென தனி ட்ராக்குகள் அமைக்கப்பட்டு இது போன்று பாதுகாப்பாக நடைபெறுவது சைக்கிள் பந்தய வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.