ஆன்லைன் சூதாட்ட மோசடியில் பல கோடி ரூபாய் ஏமாற்றிய பொறியியல் பட்டதாரி கைது..!

ன்லைன் சூதாட்ட மோசடி மூலம் ஒரே ஆண்டில் 10 கோடி ரூபாய் சம்பாதித்த பொறியியல் பட்டதாரி இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆனந்த் என்ற நபர் சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

 

அதில் இணையதளம் மூலம் பல லட்சம் ரூபாய் ஏமாந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இணையதளங்கள் வாயிலாக பணம் செலுத்தி ரஷ்ய நாட்டில் உள்ள இணைய தளம் மூலம் பணம் பறித்தது தெரியவந்தது.

 

இதனையடுத்து செல்போன் எண்களை வைத்து சென்னையை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்யாவில் உள்ள மோசடி கும்பல் உடனடியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் கூட்டு சேர்ந்து மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது.

 

இதனையடுத்து இவர்களிடம் இருந்த விலை உயர்ந்த 2 லேப்டாப், ஒரு கணினி, பத்து செல்போன், 27 ஏடிஎம் கார்டு, 340 சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.