டிக்டாக் கவர்ச்சி ஆட்டம்! இரட்டை அர்த்தம் கொண்ட டைலாக்! இலக்கியாவுக்கு வந்த சோதனை!

டிக்டாக்கில் பிரபலமான இலக்கியா என்பவர் தனது பெயரில் போலி அக்கவுண்ட் உருவாக்கி சிலர் பணம் பறித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். குற்றங்களின் கூடாரமாய் வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது டிக்டாக் செயலி. இந்த செயலியாலும் இதனை பயன்படுத்துவதாலும் தினுசு தினுசாக குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

 

இந்த பட்டியலில் புதிதாக போலி ஐடி பெயரில் பணம் பறித்து சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ள குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டிக் டாக் கூறும் நல்லுலகில் இலக்கியாவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. திரைப்பட பாடல்களுக்கு ஆபாச நடன அசைவுகளுடன் இவர் வெளியிடும் வீடியோக்கள் அடல்ஸ் ஒன்லி ரகம்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் டிக்டாக் செயலியில் வலது காலை எடுத்து வைத்து இறக்கிய இலக்கியா இழுத்து போர்த்திக் கொண்டு தான் முதலில் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். ஆனால் அந்த வீடியோக்கள் லைக்குகளுக்கு லாய்க்கற்றவை என புறம் தள்ளி விட்டனர் ரசிகர்கள். இதனால் தாராள மனசுடன் அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் கவர்ச்சி.

 

சொற்ப ஆடைகளுடன் , இரட்டை அர்த்த பாடல்களுடன் களமிறங்கிய இலக்கியாவுக்கு டிக்டாக் உலக ரசிகர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது. லைக்குகள் அடை மழையாக வெளுத்து வாங்கத் தொடங்கியது. சாதாரணமாக நாம் பார்த்து சிரித்த காமெடி வசனங்களை கூட இலக்கியா தமது பாணியில் டிக்டாக் வீடியோவாக மாற்றினால் அடல்ஸ் ஒன்லியாக மாறியது.

 

இந்த ஆபாச ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு எனக்கு பிடித்து இருக்கிறது அதனால் வீடியோ வெளியிடுகிறேன் என்று பதிலளித்துள்ளார். குறுகிய காலத்திற்குள்ளாகவே டிக் டாக் மூலம் பிரபலமான இலக்கியாவுக்கு சில சினிமா வாய்ப்புகளும் தேடி வந்துள்ளன. யோகி பாபு நடித்த சோம்பி என்ற படத்தில் இலக்கியா தலைகாட்டிவிட்டு போய்விடுகிறார்.

ரசிகர் ஒருவர் கமெண்ட் பாக்ஸில் கேள்வி எழுப்பும் வரை எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஐந்தாயிரம் ரூபாய் உங்கள் அக்கவுண்டில் செலுத்தி விட்டேன். நீங்கள் ஏன் டிக் டாக் செய்ய வரவில்லை எனக் கேட்டிருந்தார் ஒருவர். எதற்கு என விசாரித்த போது தான் இலக்கியாவின் பெயரில் டிக்டாக் செயலியில் போலி அக்கவுண்ட் உருவாக்கி சிலர் பணம் பறித்து விவகாரம் தெரிய வந்துள்ளது.

 

5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு நாள் முழுவதும் தம்முடன் இருந்த டிக் டாக் வீடியோக்கள் எடுத்து வெளியிடலாம் என இலக்கியா மெசேஜ் போடுவது போல போட்டு ஒரு கும்பல் வலை விரித்துள்ளது. இதனை உண்மை என நம்பி பலர் அந்த கும்பல் அளித்த வங்கி கணக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாந்து உள்ளனர். இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த இலக்கியா தமது பெயரில் போலியாக ஐ‌டி தொடங்கி சிலர் பண மோசடி செய்து இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார்.

 

இந்த விவகாரத்தில் மோசடி நபர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். டிக்டாக் செயலி மூலம் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. எதற்குமே பிரயோஜனம் இல்லாத நடக்கும் சண்டைகளும் அதிகம். டிக்டாக் செயலியை பெண்கள் பயன்படுத்தக்கூடாது என அரசியல் பிரமுகர் ஒருவர் பொதுமேடையில் கேட்டுக் கொள்ளும் அளவுக்கு அதில் சீர்கேடுகள் அதிகரித்து விட்டன.