அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மரணம்..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே முத்தையா என்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தனது கிராமத்தில் முத்தையா என்ற விவசாயி தனது வயலில் வேலை பார்க்கச் சென்றார்.

 

அப்பொழுது உயர்மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் அதன் மீது கால் வைத்ததில் மின்சாரம் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் உறவினர்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்து சென்ற காவல் மற்றும் வருவாய் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வயல்வெளியில் தாழ்வாக செல்லும் உயரழுத்த கம்பியை சீரமைக்கும் பணியில் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராமத்தினர் குற்றம் சாட்டினார்.