ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரொனா பரிசோதனை…முடிவு என்ன?

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விரைவு பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. ஆந்திர மாநிலத்தில் பொதுமக்களுக்கு கொரொனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கும் வகையில் தென் கொரியாவில் இருந்து ஆந்திர மாநில அரசு சுமார் ஒரு லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் வாங்கியுள்ளது.

 

இதையடுத்து விரைவு பரிசோதனைக் கருவியை கொண்டு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

 

இந்தியாவில் மாநில அரசுகளோடு இணைந்து மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது வெளிநாடுகள் உட்பட இந்தியா தெரிவித்துள்ள கொரொனா அதிவிரைவு பரிசோதனைக்கான 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரொனா பாதிப்பு இரண்டு மடங்காகும் விகிதம் என்பது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு முன்பாக மூன்று நாட்கள் என்ற அளவில் இருந்ததாகவும் தற்போது 6 நாட்களாக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. மேலும் தேசிய அளவிலான கொரொனா பாதிப்பு இரண்டு மடங்காகும் விகிதாச்சாரம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட 19 மாநிலங்களில் நன்றாகவே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரொனாலிருந்து குணமடைவோர் மற்றும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்போரின் விகிதம் 80:20 என்ற அளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 40 விழுக்காடு அளவுக்கு சரிந்துள்ளதாகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 13 விகிதத்திற்கு மேலாக உயர்ந்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

வரும் மே மாதத்திற்குள் உள்நாட்டிலேயே 10 லட்சம் ரேபிட் கருவிகள் தயாரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.