மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா உச்ச நிலையை அடையும்! அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மே மாதத்தின் முதல் வாரத்தில் கொரொனா பாதிப்பு உச்ச நிலையை அடையும் என்றும் அதன் பின்னர் பாதிப்பு படிப்படியாக குறையும் என்றும் அரசு மதிப்பிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ள தகவலின்படி இந்தியாவில் கொரொனா பாதிப்பு மே மாதத்தின் முதல் வாரத்தில் உச்சநிலையை அடையும் என்றும் அதன்பின் படிப்படியாக குறையும் என்றும் கூறப்படுகிறது.

 

அடுத்தவாரம் மிக சிக்கலாக இருக்கும் என்றும், தீவிர மூச்சு கோளாறு உடையவர்களையும் அறிகுறி உடையவர்களையும் சோதனைக்கு உட்படுத்தி வருவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரொனா பாதிப்புள்ள பகுதிகளில் நிதி நிறுவனங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை அனுமதிப்பதற்கான புதிய திருத்தங்களை செய்துள்ளது.

 

வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் டி‌வி, ஃபிரிஜ், செல்போன்களை வாங்கலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன. கொரொனா பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வரும் 20ஆம் தேதி முதல் சில விலக்குகள் அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

 

அதன்படி திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது அது வரும் 20ஆம் தேதி முதல் விவசாய பணிகள், கட்டிட வேலைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு வர்த்தகத்திற்கும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் போன்கள், டிவி, லேப்டாப் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்றவற்றை வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமேசான், பிலிப்காட், ஸ்னேப்டீல் போன்ற நிறுவனங்களின் மூலம் ஆன்லைனில் வர்த்தகம் மேற்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

 

அதேசமயம் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வினியோக வாகனங்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற வேண்டியது அவசியம் என்றும் தெரிகிறது.