நடிகர் விக்ரமுக்கு கொரொனா தொற்று உறுதி..!

டிகர் விக்ரமுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது வீட்டு தனிமையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

நடிகர் விக்ரமுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த உடல் சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் இருப்பதன் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

 

அப்பொழுது அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

 

இதன் காரணமாக அவர் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் தற்போது அவரது இல்லத்தில் வீட்டு தனிமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.