வேலூரில் கார் மோதி கட்டட தொழிலாளி உயிரிழந்த விபத்தில் உரிய இழப்பீடு வழங்கக்கோரி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடியாத்தம் அடுத்த கே வி குப்பம் சீதாராமன் பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த கார் பலமாக இடித்து விட்டு நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த ஜெய்சங்கரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உரிய இழப்பீடு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய சமூக பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.