வெளியூரில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு வேதிக்கரைசல் குளியல்

உத்தரபிரதேசத்தில் வெளியூரில் இருந்து திரும்பிய தொழிலாளர்களை வேதி கரைசலால் குளிப்பாட்டியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டெல்லியில் இருந்து வந்த தொழிலாளர்கள் மீது சோடியம் ஹைப்போ குளோரைட் கலந்த நீரை தெளித்துகுளிப்பாட்டி உள்ளனர்.

 

இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானதால் அதிகாரிகளின் செயலுக்கு கடும்எதிர்ப்பு எழுந்துள்ளது. தரையை கழுவ பயன்படும் இந்த வேதிப்பொருள் தோல் மீது பட்டால் கடும் எரிச்சலையும் ஊறலையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி சோடியம் ஹைப்போ குளோரைடு கலந்த நீரை தெளித்து குளிப்பாட்டியதாக தீயணைப்பு துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனை செய்யவே தான் அறிவுறுத்தியதாக வேதிப்பொருளால் குளிப்பாட்டியது தனக்கு தெரியாது என்றும் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.